×

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட உப்பங்காடு சாலை மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

*மக்களின் குரல்கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட உப்பங்காடு செல்லும் கிராம சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து வடரங்கம் செல்லும் பிரதான சாலையில், குன்னம் கிராமத்திலிருந்து உப்பங்காடு செல்லும் இரண்டு கி.மீ தூர தார்சாலை மேம்படுத்தப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வரும் இந்த கிராமத்துக்கு செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இரவு நேரங்களில் வந்து செல்வது சிரமமாக உள்ளது. சைக்கிள் மற்றும் சக்கர வாகனங்களில் செல்லும்போது மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த சாலை மேம்படுத்தப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து உப்பங்காடு கிராம மக்கள் கூறுகையில். இந்த கிராம சாலைய மேம்படுத்தக் கோரி பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளை நேரில் சென்று வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்குள் உடனே இங்கிருந்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிக்கும் வகையில் சாலையை தற்காலிகமாகவாவது மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட உப்பங்காடு சாலை மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Upangadu Road ,Kidu ,Upangkam Road ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் 10 ஆண்டாக...